மாதுளையின் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன...?

Webdunia
மாதுளை பழ விதைகள் B-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களை கொண்டுள்ளதால், அவை செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகின்றன. மாதுளையின் ஆரோக்கிய நன்மைகளுள் இது குறிப்பிடத்தக்கதாகும். 

மாதுளை பழத்தில் வைட்டமின் சி உள்ள பழங்களால் பல் ஈறு நோய்கள் முழுவதும் குணமாக்கப்படுகின்றன. 
 
பழத்தில் உள்ள வைட்டமின் பி1 நாம் சாப்பிடும் உணவுகளை சக்தியாக வெளியிட உதவுகிறது. வைட்டமின் பி3, மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதுகாப்பதுடன், நம்  ஞாபக சக்தி குறையாமல் பாதுகாத்து வருகிறது. 
 
மாதுளை பழத்தில் உள்ள பயோட்டின் என்ற பி குரூப் வைட்டமின் சிட்ருலின் என்ற பொருளை உருவாக்கி ரத்தத்தில் கலப்பதால் ஆண்மைக் குறைவு அகல்கிறது.
 
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளித் தருவதால், மாதுளம்பழத்தை ‘சூப்பர் ஃபுரூட்ஸ்’ என்று அழைக்கிறோம். உடல் எடையைக் குறைக்க  நினைப்பவர்களுக்கும் கொழுப்பைக்கட்டுக்குள் கொண்டு வர நினைப்பவர்களுக்கும், இந்தப்பழம் ஒரு வரப்பிரசாதம். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை  மேம்படுத்துகிறது.
 
இதில் உள்ள கிரானடின்பி உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைப்பதோடு, திசுக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதால், தோலில் சுருக்கம்,  கருவளையம் போன்ற சரும பிரச்சனைகளைத் தவிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
 
கொலஸ்ட்ரால் கொஞ்சமும் இல்லாத பழம் இது. 100 கிராம்மாதுளை 83 கலோரியைத் தருகிறது. 4 கிராம் நார்ச்சத்து இதில் இருப்பதால், நல்ல செரிமானத்துக்கும், செரிமான மண்டல இயக்கத்துக்கும் மிகவும் நல்லது.
 
இதில் ஃபோலிக் அமிலம் பிகாம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால், கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம். உயர்ரத்த அழுத்தம், உடல்பருமன்,  வயிற்றுப்போக்கு, நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்