கறிவேப்பிலையை உண்பதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உண்டு...?

Webdunia
கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ, பி, சி, இ போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளது. 

கறிவேப்பிலையில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் எ உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். வைட்டமின் எ குறைபாட்டால் உங்களுக்கு மாலைக்கண் நோய் , கண் உறுத்தல் போன்ற பிரச்சினை ஏற்படும்.
 
கறிவேப்பிலைக்கு உடலில் உள்ள தேவையற்ற கேட்ட கொழுப்பினை கரைக்கும் சக்தி உண்டு. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. தினமும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையினை உண்டு வந்தால் உடல் பருமன் கணிசமாக குறையும்.
 
இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று இரத்த சோகை நோய் ஆகும். கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. தினம் 10 கறிவேப்பிலையினை உண்டு வந்தால் இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும்.
 
முடியின் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகவும் உதவும். தினமும் கறிவேப்பிலை உணவில் சேர்த்து வந்தால் நரைமுடி, முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்சினை ஏற்படாது. மேலும் உங்களின் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
 
கறிவேப்பிலையில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. கால்சியம் நிறைந்த உணவுகளில் இருந்து கால்சியம் சத்துக்களை உறிஞ்ச மெக்னீசியம் சத்தானது முக்கிய பங்கினை வகிக்கின்றது. கறிவேப்பிலை உண்ணும்பொழுது எலும்புகள் மற்றும் பற்கள் வலிமை பெரும்.
 
கறிவேப்பிலையில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து மிக மிக முக்கியம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்