முதுகுவலி மற்றும் மூட்டுவலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...?

Webdunia
முதுகெலும்பு பிரச்சினையோ அல்லது மூட்டு பிரச்சினையோ இதை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு  காண்பது அவசியம். 

அண்மையில் வெளியான ஆய்வுகளின்படி 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பெரும்பாலும் முதுகெலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று  கூறப்பட்டுள்ளது.
 
பெரும்பான்மையான இளம்வயது மக்கள் அலுவலகங்களிலோ அல்லது வீட்டிலோ அமர்ந்த நிலையில் 8 முதல் 10 மணி நேரம் அமர்ந்துகொண்டே பணிபுரிவதால் அவர்களுக்கு முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இல்லையென்றாலும் காலங்கள் செல்ல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக 50 வயதிற்கு மேல் அவர்களுக்கு முதுகு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதேபோல் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே பணிபுரிவதால் மூட்டு சார்ந்த  பிரச்சினைகளும் ஏற்படுகிறது இதற்கு தீர்வு காண்பது அவசியம்.
 
உடலின் எடையைத் தாங்குவதே இந்த மூட்டுகள் தான். மூட்டுகள் என்பது எலும்புகள், குருத்தெலும்புகள், தசை நாண்கள் முதலானவற்றை உள்ளடக்கியது. இவற்றை நம் உடலோடு சேர்த்து உறுதியாக பிடித்துக்கொள்ள கொலாஜன் என்னும் புரதம் உண்டு.
 
உடல் பருமன் மூட்டுவலிக்கான மிக முக்கியமான காரணமாக உள்ளது அதிக பளு தூக்குதல் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம், ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், சீரற்ற மனநிலை, போதைப்பழக்கம், சில நேரங்களில் பரம்பரை ரீதியாகவும் இந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
 
ஒரே இடத்தில் அதிகமான அழுத்தம் தருவது மூட்டு வலிக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. கொலாஜன் உற்பத்தியில் குறையில்லாமல் இருக்கும் வரை மூட்டுவலி என்பதோ பிரச்சினை என்பதோ நமக்கு வரவே வராது. சரியான உடற்பயிற்சி இல்லாதது. அதிகமான உணவு உண்ணுதல் மோசமான விளைவை  ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்