மகத்துவம் நிறைந்த மாதுளம் பூவின் மருத்துவ குணங்கள் !!

மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து இருவேளையும் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடையும் உடலும் புத்துணர்வு பெறும்.

மாதுளம் பூவைத் தின்று சிறிது பால் பருகவும் தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டுவர ரத்த சுத்தி கிடைக்கும். அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு  சீற்றத்திற்கு மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்துவது நல்லது. 
 
தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி தீர மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
 
புழு வெட்டு பிரச்சனையால் தலையில் வழுக்கை போன்று உள்ளதா? மாதுளம் பூ சாறு எடுத்து அந்த இடத்தில் தேய்த்து வர விரைவில் புழு வெட்டு சரியாகும்.
 
பெண்களுக்கு கருப்பை நன்கு வருவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும். மாதுளம் பூவை பசும்பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். தாது பலம் பெறும்.
 
ஆண்களுக்கு மாதுளை பூவை காயவைத்து பொடி செய்து அதனுடன் அருகம்புல் பொடி கலந்து தேனில் குழைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாது  விருத்தியடையும்.
 
ஹீமோ குளோபின் அளவை சீர் செய்யவும் மாதுளம் பூ சிறந்த மருந்து. உடல் நன்கு பலப்பட மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்