ஓட்ஸ் மூலம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்....?

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (13:34 IST)
ஓட்ஸில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், விட்டமின் பி6, பி1, பி2, இரும்பு, புரதம், நார் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.


ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது. ஓட்ஸில் உள்ள பைட்டோ கெமிக்கலானது ஹார்மோன் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பினை தடுக்கிறது.

ஓட்ஸில் அதிக அளவு நார்சத்து நிரம்பியுள்ளது. இந்த நார்சத்து உணவை சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

ரத்த அழுத்தம் சராசரி நிலையை விட அதிகமாக இருப்பவர்களுக்கு ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மன அழுத்தம் உண்டாகிறது. ஓட்ஸ் உணவில் இந்த மன அழுத்த நிலையை குறைப்பதற்கான வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. ஓட்ஸ் உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு மற்றும் வயிற்றுவலி காரணமாக பெண்கள் சிலர் உடல்ரீதியாக பலமிழந்து காணப்படுவார்கள். இவர்கள் ஓட்ஸ் மூலம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வர அவர்களின்  உடல்சோர்வு நீங்கும். அடிவயிற்று வலியும் குறையும்.

வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்