தினமும் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

Webdunia
தினமும் காலை வெந்நீர் குடித்தால் நல்ல பலன் உண்டு. சுடுதண்ணீரால் உங்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மிதமான சூட்டுடன் தண்ணீரை பருகி வர, மூக்கடைப்பு, சளி, இருமல் உள்ளிட்ட தொந்தரவுகள் சரியாகும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக வெந்நீர் குடிப்பதை உங்கள் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது மேம்பட்ட வளர்சிதை மாற்றத்துடன்  தொடர்புடையது. கலோரிகளை எரித்து உடல் எடையை குறைப்பதற்கு இது உதவும். மிதமான சூடு உள்ள நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால்  நல்ல பலன்களை தரும்.
 
செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இயற்கை தந்த மருந்து இது என்றே சொல்லலாம். வெந்நீர் அருந்தினால் உங்களுக்கு எளிதாக செரிமானம் நடைபெறும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதிலும் இது முக்கிய பங்காற்றுகிறது. தினமும் வெந்நீர் அருந்தினால் உடல்வலி பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
 
உங்களது மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த தினமும் வெந்நீர் பருகுவது நல்லது. இதன் மூலம் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது  மட்டுமல்லாமல், வலிகளில் இருந்தும் விடுபடலாம்.
 
வெந்நீர் உங்கள் குடல்கள் சுருங்குவதற்கு உதவும், இதன் மூலம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற முடியும். இது உடல் இயக்கங்களை சீராக வைப்பதற்கு பயன்படுகிறது. மலச்சிக்கல் ஏற்படும் சமயங்களில் இதனை முயற்சித்து பாருங்கள்.
 
இதய நோய் உள்ளிட்ட பல நோய்களில் இருந்து தப்பிக்க உடலில் ரத்தஓட்டம் சீராக இருக்க வேண்டும். வெந்நீர் பருகுவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. சூடான நீரில் குளிப்பதும் உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். அதற்காக தினமும் சூடான நீரில் குளிக்க வேண்டிய  அவசியமில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்