புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் என்ன பயன்கள்...?

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (15:08 IST)
புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், குடல் புண், வயிற்றுப்புண், தொண்டைப்புண் போன்றவைகள் குணமாகும்.


அஜீரண கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் புடலங்காயை சேர்த்து கொண்டால் இந்த பிரச்சனை தீரும். மேலும் இதனால் பசியும் உண்டாகும். நரம்புகளுக்கு புத்துணர்வு அளித்து ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுபாட்டுக்குள் வரும். மேலும் புடலங்காய் உடல் எடையையும் கட்டுப்பாட்டில் வைக்கும்.

கொத்துமல்லி விதைகளுடன் புடலங்காய் இலையை நசுக்கி சாறை எடுத்து குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை சிறுநீராகவும், வியர்வையாகவும் வெளியேற்றும் தன்மையை புடலங்காய் கொண்டுள்ளது.

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுபாட்டுக்குள் வரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்