கொழுப்பு உடலில் அதிகம் சேராமல் பாதுகாக்கும் திராட்சை சாறு !!

செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:45 IST)
திராட்சை பழங்கள் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்களை அதிகம் கொண்டது. மேலும் கால்சியம், ரைபோபிளவின், மெக்னீசியம் போன்ற சத்துகளும் அதிகம் கொண்டவையாகும்.


இந்த சத்துக்கள் அனைத்தும் உடலின் எலும்புகள், பற்கள் போன்றவற்றின் உறுதித்தன்மைக்கும், ரத்தக்காயம் ஏற்படும் போது ரத்தம் வேகமாக குறையவும் உதவுகிறது.

மலச்சிக்கல் சிலருக்கு தினமும் காலை கடன்களை கழிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகிறது. திராட்சையில் நார்ச்சத்துகள் அதிகம் கொண்டது. மேலும் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை போக்கும் நீர்ச்சத்தும் அதிகம் நிறைந்தது. எனவே மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் தினமும் சிறிது திராட்சை பழங்களை சாப்பிடுவது சிறந்த பலனை தரும்.

திராட்சைப்பழங்களை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு கொலஸ்டரால் எனப்படும் கொழுப்பு உடலில் அதிகம் சேராமல் உடல்நலத்தை பாதுகாக்கிறது.

தினமும் சில திராட்சைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கும்.

இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் சதவீதத்தையும் குறைகிறது. திராட்சைபழம் அதிகரிக்கும் சக்தி கொண்டதால் கண்பார்வை தெளிவாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்