வெறும்வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் பசி நன்கு எடுக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு வெந்நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகலும் என்று கூறப்படுகிறது.
அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய் உணவுகள் மற்றும் இனிப்புப்பண்டங்கள் உண்ட பின் சிலருக்கு ஒருவாறு நெஞ்சு எரிச்சல் இருந்தக்கொண்டிருக்கும் அச்சமயத்தில் வெந்நீரை பருகினால் நெஞ்சு எரிச்சல் போய்விடுவதோடு மற்றும் உணவும் செரித்துவிடும்.
உணவு உண்ட பின்பு வெந்நீரை பருகினால் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் கொழுப்புகளை சேரவிடாமல் கரைத்துவிடும் சக்தி வெந்நீருக்கு உண்டு.
காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் தோலுக்கு நல்லது. இதன் மூலம் இளமையிலேயே வயதான தோற்றம் கொண்டவர்கள் தன் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்று கூறப்படுகிறது. அடிக்கடி காபி, டீ குடிப்பவர்கள் அதற்கு மாற்றாக சுடு தண்ணீரில் சுக்கு கலந்து குடிப்பது சிறந்தது.
மூக்கு அடைப்புக்கு சிறந்த மருத்துவர் வெந்நீர்தான். வெந்நீரில் முகத்தைக் காண்பித்தால் மூக்கடைப்பு குணமாகும். வெயிலில் அலைந்து விட்டு வருபவர்கள் குளிர்ந்த நீரை குடிப்பதை விட சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது தாகம் தீர்க்கும் நல்ல வழியாகும்.
ஆஸ்துமா போன்ற நோய் இருப்போர் தங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடித்து வரவேண்டும்.