கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது. இது கிராமப்புறங்களில் முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் குணங்கள் கொண்டது.
* கல்யாண முருங்கையில் சுண்ணாம்புச்சத்து, நார்சத்து, இரும்புசத்து அதிகம் உள்ளது. கல்யாண முருங்கையானது கர்ப்பபை பிரச்சனைகளை சரிசெய்யும். கருச்சிதைவிலிருந்து.
* கல்யாண முருங்கை இலை, முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு இவற்றை சூப்வைத்து குடித்தால் ரத்தசோகை குணமாகும். கல்யாண முருங்கை இலையுடன் மிளகு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் பனி மற்றும் மழை காலத்தில் சளித்தொல்லை இருக்காது.