இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா துளசி...!!

Webdunia
தினமும் சில துளசி இலைகளை மென்று தின்றாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும். துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும்.
துளசி அதி அற்புதமான கிருமி நாசினி. வீட்டுக்கு கிருமி நாசினி பயன்படுத்துவது போல மனித உடலுக்கான கிருமி நாசினியாக பயன்படுகிறது. துளசி தினமும் துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் வாழ்நாள் முழுக்க வரவே  வராது.
 
துளசி நீர், சுத்த்மான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன்  தோல் சுருக்கம் நீங்கி நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும்.
 
10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி குடித்து விட்டு சிறிது எலுமிச்சை சாறை அருந்தி கம்பளிக் கொண்டு உடம்பு முழுக்க மூடிக்கொண்டு படுத்தால் மலேரியா காய்ச்சல் கூட படிப்படியாக குறையும்.
 
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி, சிரங்கு  போன்றவை குணமாகும். துளசி இலையுடன் அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால்  முகப்பரு மறையும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்