எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள துளசி !!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (18:47 IST)
துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.


துளசியானது திருத்துளாய், துளவு, அரி, இராம துளசி, குல்லை, வனம், விருந்தம், துழாய், துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

துளசியில் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, காட்டு துளசி பல்வேறு வகைகள் உள்ளது.

துளசியின் இலை, விதை போன்ற அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. துளசி இலைச் சாற்றில் தேன், இஞ்சி கலந்து ஒரு தேக்கரண்டி குடித்து வரலாம்.

துளசி உடலிற்கு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. துளசி இலையைப் ஊற வைத்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.

பேன், பொடுகு தொல்லை நீங்க துளசி சாறு எடுத்து அதனுடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி நஞ்சுகளை வெளியேற்றும். கெட்ட கொழுப்பை நீக்கும் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்