உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது கீல்வாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. வயதானவர்களை இது பெரிதும் பாதிக்கிறது. உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்க சில உணவு வகைகளும் காரணம் என கூறப்படுகிறது.
அதிக சர்க்கரை அல்லது பிரக்டோஸ் உள்ள இனிப்பு பானங்களில் ப்யூரின் உள்ளது.
இனிப்பு பானங்கள், உணவுகளில் உள்ள ப்யூரின் காரணமாக யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகிறது.
சாக்லேட், ஐஸ்க்ரீம் உள்ளிட்டவற்றில் கலக்கப்படும் கார்ன் சிரப்பில் ப்யூரின் அளவு அதிகமாக உள்ளது.
ஆல்கஹால் பானங்கள் சிறுநீரகம் யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதை தடுப்பதால் யூரிக் அமிலம் உடலில் சேர்கிறது.
சிவப்பு இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சியில் ப்யூரின் அளவு அதிகமாக உள்ளது.
கடல் உணவுகளில் டூனா மீன், ஸ்காலப்ஸ், கெழுத்தி போன்றவற்றில் ப்யூரின் அளவு அதிகம் உள்ளது.
ஈஸ்ட் சேர்க்கப்படும் உணவுகளில் ப்யூரின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
கீல்வாதம், யூரிக் அமிலம் குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.