குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவுகளை நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள்...!!

Webdunia
உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப் பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது.

குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவுகள்  விஷமாக மாற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
காய்கறி, கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் பிரிட்ஜில் வைத்திருக்க கூடாதாம். குறிப்பாக ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது வேண்டாம் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் மாமிசத்தில் பாக்டீரியா உருவாகிவிடும். அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல்  உண்டுவிட்டால், இரைப்பையில் நோய் தாக்கிவிடும். இதுபோன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு  மட்டுமல்லாது, ஈரல், சிறு நீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கும்.
 
இறைச்சியை உடனடியாக கடைகளில் வாங்கிய உடனே வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால்தான் அதில் உள்ள புரத சத்துக்கள்  முழுமையாக கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் வார கணக்கில் இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, பின்னர் அதனை சமைப்பதினால்  அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது, அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சமயங்களில் அது விஷ உணவாக மாறவும்  வாய்ப்புண்டு.
 
மொத்தத்தில் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியே சமைக்கப்படுவதால், ஓட்டல்கள்,  சிற்றுண்டியகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
 
குளிர்சாதனப் பெட்டியில்  சமைத்த உணவுகள் அனைத்தையும் வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. இதனால் உடலுக்குத் தீங்கு விளையும். எப்படி சமைத்த உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லதில்லையோ, அதே போல் நாம் வாங்கும் முட்டையையும்  குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்