சோடா உப்பில் ஆன்டி ஆக்சிடன்ட் குணங்கள் அதிகமாக உள்ளன. இவை உடலில் உள்ள அமிலத் தன்மையை குறைக்கும். இதனால் குடல் மற்றும் தொண்டை எரிச்சல் வராமல் தடுக்கலாம்.
சோடா உப்பு மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவற்றை கலந்து பல் துலகினால் முத்துப் போன்ற வெள்ளை பற்கள் பெறலாம். இதில் இருக்கும் அல்கலைன் பற்களின் நிறத்தை மாற்றாமல் வைத்திருக்க உதவும்.
பழுத்த ஸ்ட்ராபெர்ரி பழங்களை அரைத்து சோடா உப்புடன் கலந்து பல் துலகினால் அழுக்குகளை போக்கி கறையை விலக்கும். இதை மாதத்திற்கு 2 முறை மட்டுமே செய்ய வேண்டும்.
சோடா உப்பு உடலில் உள்ள அமிலத்தின் அளவை கட்டுப்படுத்தும். மேலும் இதில் இருக்கும் நச்சற்ற தன்மை உடலின் வீக்கங்கள் ஏற்படுவதை தடுக்கும்.
ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் சமையல் சோடா ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கும் பசையை பயன்படுத்தி உங்கள் நகத்தை சுத்தம் செய்யலாம். இதனால் நகங்களில் இருக்கும் மஞ்சள் நிறம் மாறி நகம் பளபளப்பாக இருக்கும்.
முக பருக்கள் முக அழகினை கெடுக்கும். இதை சரி செய்ய சோடா உப்பு மிகவும் உதவுகிறது. பருக்களால் உண்டாகும் தழும்புகள் , மூக்கின் ஓரங்களில் வரும் கருமை மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும்.