உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய கைக்குத்தல் அரிசியின் பயன்கள் !!

சனி, 7 மே 2022 (15:15 IST)
கைக்குத்தல் அரிசியை கொண்டு சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவ்வளவாக உடல் பாதிப்புகள் வருவதில்லை அதனால் நமது முன்னோர்கள் அதையே சாப்பிட்டு நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.


கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால், பெருங்குடல் புற்றுநோய் வருவதை தடுத்து, பெருங்குடலை பாதுகாக்கிறது. கைக்குத்தல் அரிசியில் செலினியம் உள்ளதால் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்ககூடிய தன்மை உள்ளது. இதிலுள்ள பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் லிக்னான் மார்பக புற்று நோய் மற்றும் இதய நோய் இரண்டையும் வராமல் காத்துக் கொள்ள உதவுகிறது.

கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் மிகவிரைவில் செரிமாணம் அடைய உதவுகிறது. அதுமட்டும் இல்லாமல் இதய நோய் பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

கைக்குத்தல் அரிசியில் அதிகமாக நார்ச்சத்து உள்ளதால், கலோரி அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் உடல் எடை விரைவில் குறையும். இவற்றில் அதிகம் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் சாப்பிட்ட பிறகு, மிக விரைவில் உணவு செரிக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கலை தடுத்து, குடல் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.

அதிகமான நார்ச்சத்து இருப்பதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் இரண்டு வகை நீரிழிவு நோயை சீராக காத்துக்கொள்ள கைக்குத்தல் அரிசி பயனுள்ளதாக இருக்கிறது.

கைக்குத்தல் போன்ற கரையாத நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட்டால் பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்