உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள சூரியகாந்தி விதைகள் !!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (14:38 IST)
சூரியகாந்தி விதைகள் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்த விதைகளில் ஒன்று. இவை உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள், பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.


சூரியகாந்தி விதைகளில் இரத்தக்குழாய் சுருக்கங்களை உண்டாக்கக்கூடிய நொதிகளை அழிக்கக்கூடிய கலவை உள்ளது. இது இரத்த நாளங்களை தளர்த்துவதால் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எப்போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக மிக அவசியம். இதற்கு சூரியகாந்தி விதைகள் உதவியாக இருக்கின்றன.

பல ஆய்வுகளில் இந்த சிறிய விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தினசரி ஒரு கைப்பிடி அளவு சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டு வந்தால் ஆறு மாதங்களில் 10 சதவிகிதம் உணவிற்கு முன் உள்ள  இரத்த சர்க்கரை அளவு குறையும்.

சூரியகாந்தி விதைகளில் துத்தநாகம் உள்ளதால் உங்கள் உடலில்  300 என்சைம்களை உருவாக்குகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இதில் செலினியம் மற்றும் பிற வைட்டமின்கள் இருப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் தொற்று நோய்களை எதிர்த்து பாதுகாக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கிறது.

நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உள் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஏற்படுத்துகிறது. இதை உணவில் சேர்க்கும் பெண்களின் மாதவிடாய் வருவதற்கு முன் வருகின்ற நோய்கள் குறைகிறது.

சூரியகாந்தி விதைகளில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை காளானை எதிர்க்கும் தன்மை உங்கள் முகத்தில் முகப்பரு வராமல் சருமத்தை பளபளப்பாகவும் பாதுகாப்பாகவும் வைக்கிறது. இது வயதான தோற்றத்தை குறைத்து சருமத்தை இளமையுடன் இருக்க செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்