உடல் எடையை குறைக்க உதவும் சில வகை பானங்கள் !!

Webdunia
ஆப்பிள் ஜூஸ்: குறைவான கலோரி கொண்ட பழம் ஆப்பிள். 100 கிராம் ஆப்பிளில் 50 கலோரிகள் உள்ளது. ஆப்பிள் ஜூஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.

தக்காளி ஜூஸ்: தக்காளி, குறைவான கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் விவசாயத்துறை ஆய்வின் படி, 100 கிராம் தக்காளி வெறும் 18 கலோரிகளையும், 3.86 கிராம் கார்போவும் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க தக்காளி ஜூஸ் பிரதான பங்கு வகிக்கிறது. வாரத்திற்கு மூன்று முறை தக்காளி ஜூஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
 
கேரட் ஜூஸ்: கேரட்களில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. நார் செரிமானம் அடைய மிக அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும். ஸோ, ஒரு முழு கேரட் சாப்பிட்டாலே, நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு பசியே இருக்காது. அமெரிக்காவின் விவசாயத்துறை ஆய்வின் படி, 100 கிராம் கேரட்டில் 41 கலோரியும், 3 கிராம் நார்ப்பொருளும் உள்ளது. வாரத்திற்கு மூன்று முறை கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
 
1 லிட்டர் தண்ணீர், 3 டீஸ்பூன் பெருஞ்சீரகம், 2 இன்ச் இலவங்கப்பட்டை, 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் கருப்பு மிளகு மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு தேவைப்படும்.
 
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் நீரை ஊற்றவும். பிறகு பெருஞ்சீரகம், கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து 5-7 நிமிடம் வரை இதை கொதிக்க விடுங்கள். வெதுவெதுப்பானதும் இதை வடிகட்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
 
இலவங்கப்பட்டையில் அதிக ஆன்ட்டி-ஆக்சிடென்ட் உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவும். மேலும் இது சர்க்கரை நோய் வராமலும் தடுக்கும். இந்த பானத்தில் சேர்த்துள்ள பெருஞ்சீரகம் செரிமான பிரச்சனையை சரிசெய்யும் மற்றும் எதிர்ப்பு சக்தியை கூட்டும். மேலும் இதிலுள்ள கருப்பு மிளகு, உடல் எடையை குறைக்க செய்யும் சிறந்த மூலப்பொருள் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்