இந்த சீரக இஞ்சி நீரை தயாரிக்க தேவையான பொருட்கள்: இஞ்சி-சிறு துண்டு, சீரகம்-1 ஸ்பூன், எலுமிச்சை சாறு-1/2 ஸ்பூன்.
செய்முறை: தேவையான அளவு நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி கொண்டு அதனுடன் இஞ்சியை துருவி அல்லது நசுக்கி போடவும். பின்பு இந்த நீரை கொதிக்க விட்டு இறக்கி கொண்டு இந்த நீருடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் உங்கள் தொப்பை குறைந்து விடும்.
பயன்கள்: தினமும் காலையில் இந்த நீரை குடித்து வாருங்கள்.புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இந்த நீருக்கு உள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை காக்கும். உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புகளையும், கொலஸ்ட்ராலையும் இந்த சீராக இஞ்சி நீர் எளிதில் குறைத்து விடுகிறது.