ஆரோக்கியத்திற்கு அவசியமான பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள புடலங்காய் !!

Webdunia
வியாழன், 19 மே 2022 (14:00 IST)
புடலங்காயில் ஆரோக்கியத்திற்கு அவசியமான பல்வேறு ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச் சத்து , புரதம் மற்றும் கலோரிகள் உள்ளன.


வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் குணமாகும்.

தினமும் ஒரு வேளையாவது புடலங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

புடலங்காய் குளிர்ச்சி தன்மை நிறைந்த ஒரு காய் வகையாகும். தினமும் இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிடுவதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம். புடலங்காயை நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்து கொள்வது நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது.

உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் புடலங்காய் சிறப்பாக பணியாற்றுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

சிறுநீரை பெருக்குவதன் மூலம் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றப் படுவதை துரிதப் படுத்துகிறது. வறட்சி மற்றும் நீரிழப்பை குறைத்து சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பையின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்