உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும் வழிகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

வியாழன், 19 மே 2022 (13:44 IST)
சரியான முறையில் சாப்பிட்டால் 80% தேவையற்ற கொழுப்பை குறைக்க முடியும். இதற்கு ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றினால் போதும்.


நொறுக்கு தீனிகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கலாம்.

தாகம், பசி போன்றவை ஏற்படும்போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை சாப்பிட்டு உண்டு தங்களின் உடல் எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர்.

எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒருநாளைக்கு குறைந்தது 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சர்க்கரையானது சுத்திகரிப்பு என்ற பெயரில் செயற்கை ரசாயனங்களை அதிகம் உபயோகிக்கின்றனர். இதை தவிர்ப்பது நல்லது. சர்க்கரைக்கு பதில் இயற்கை முறையில் கிடைக்கும் தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவை கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்