நோய் எதிர்ப்பு சக்தி கூட்டும் சீத்தாப்பழம் !!

சனி, 4 ஜூன் 2022 (16:41 IST)
சீத்தாப்பழத்தில் கனிசமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால், சளியை தடுக்கும். சளிப்பிடித்தவர்கள், இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் சளி குணமாகும்.


சீத்தாப்பழத்தில் உள்ள தாதுப் பொருட்கள் நம் உடலிலுள்ள எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இருதயத்திற்கும் வலுவூட்டும். உடலில் தேவையற்ற சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழம் சாப்பிட்டு வர, தேவையற்ற சதைகள் கனிசமாக குறையும்.

உஷ்ணத்தால் ஏற்படும் மந்தத்தைக் குணப்படுத்தும் தன்மை இப்பழத்திற்கு உண்டு. சீத்தாப்பழம் ரத்த விருத்தி செய்யும். சோகை நோயைக் குணப்படுத்தும். இப்பழத்தில் குளுக்கோஸ் கனிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.

சீத்தாப்பழத்துடன், சிறிது இஞ்சி சாறு, கருப்பட்டி சேர்த்து தின்றால், பித்தம் மொத்தமாக விலகும். நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு.

அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படுபவர்கள், சீத்தாப்பழம் தின்று வர, தசைகளை சீராக இயங்கச் செய்யும். சரும வறட்சி உள்ளவர்கள் சீத்தாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும்.

சீத்தாப்பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் சேராமல் காக்கும். சீத்தாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.

சீத்தாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மையாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும். சீதாப் பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து, பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்