மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

Mahendran

வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (18:00 IST)
இன்றைய பரபரப்பான பணி சூழலில், மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி பலருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. வேலை அல்லது தொழில் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்க முடியாது. ஆனால், மைக்ரேன் தலைவலியை தூண்டும் காரணங்களை தெரிந்துகொண்டு, அவற்றை புத்திசாலித்தனமாக தவிர்ப்பதன் மூலம் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
மைக்ரேன் தலைவலி வருவதற்கான காரணங்கள்:
 
மதுபானம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மோனோசோடியம் குளூட்டமேட் , மற்றும் செயற்கை இனிப்புகள் போன்ற சில உணவு வகைகளும் ஒற்றை தலைவலிக்கு காரணமாக இருக்கலாம்.
 
திடீர் தட்பவெப்பநிலை மாற்றங்கள், பிரகாசமான விளக்குகள், அதிக சத்தம் மற்றும் சில வாசனை திரவியங்கள் ஆகியவையும் மைக்ரேனை தூண்டலாம்.
 
பெண்களுக்கு, மாதவிடாய் அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஒற்றை தலைவலியை ஏற்படுத்தலாம்.
 
ஒழுங்கற்ற தூக்க பழக்கம், அதிகப்படியான மன அழுத்தம், சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் தவிர்ப்பது போன்றவையும் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம்.
 
மைக்ரேன் தலைவலியைத் தடுப்பதற்கான வழிகள்:
 
உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருக்க வேண்டும். எனவே தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
 
பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை தவிர்ப்பது அவசியம். தேநீர் அல்லது காபி அருந்தும் பழக்கத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்வதும் நல்லது.
 
இரவில் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு செல்வது, காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுவதால் ஒற்றை தலைவலியை தவிர்க்கலாம்.
 
விட்டமின் பி-2 (ரிபோபிளேவின்) சத்து, மைக்ரேன் தலைவலி வராமல் தடுக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்