உடலிலுள்ள வெப்பத்தை குறைத்து ஆரோக்கியம் தரும் வெள்ளை வெங்காயம் !!

சனி, 4 ஜூன் 2022 (10:49 IST)
கோடை காலங்களில் தினசரி உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து வந்தால் உடலிலுள்ள வெப்பத்தை குறைத்து வியர்வையைக் கட்டுப்படுத்தும்.


வெள்ளை வெங்காயம் வயிறு மற்றும் குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும். வெள்ளை வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது.வெள்ளை வெங்காயம் இதயத் தமனிகள் மற்றும் ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும்.

வெள்ளை வெங்காயத்தில் சோடியம் இருப்பதால் வைரஸ் அனைத்தையும் அளித்து வெளியேற்றுகிறது. அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.

இதய நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயம் சேர்ப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகிறது மற்றும் ஆரோக்கியமான இதய செயல் பாட்டிற்கு வெள்ளை வெங்காயம் பெரிதும் உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் இரத்த உறைவுகளில் இருந்து பாதுகாக்கிறது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

வெள்ளை வெங்காயத்தில் உள்ள அதிகப்படியான ஆக்சிஜனேற்ற பண்புகள் உடலின் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும்.

வெள்ளை வெங்காயத்தை அரைத்து சாறாக்கி தலை முடியில் தேய்த்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்