உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ள சாரப்பருப்பு !!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (17:19 IST)
சாரப்பருப்பில் புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச் சத்து, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.


சாரப்பருப்பு குடல் இயக்கங்களை முறைப்படுத்த உதவும். இது மலச்சிக்கல்  ஏற்படாமல் தடுக்கிறது. வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது. வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

சாரபருப்பு ஒரு சிறந்த பாலுணர்வாக தூண்டியாக கருதப்படுகிறது, மேலும் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. விந்தணு மற்றும் பாலியலில் வீரியத்தை மேம்படுத்தகிறது.

வைட்டமின் சி, வைட்டமின் பி 1 மற்றும் பி 2 உள்ளிட்ட பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

சாரபருப்புலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கிறது மற்றும் கருமையான புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்க உதவுகிறது.

சாரபருப்பில் கலோரிகள் குறைவாக உள்ளன, ஆனால் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இது உங்களுக்கு அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்