இரத்தக்குழாய் அடைப்பு பிரச்சனையை போக்கும் மருத்துவம் பற்றி பார்ப்போம்....!!

இரத்தக் குழாய் அடைப்பு நீங்க, இரத்த குழாயில் கொழுப்பு, ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் அது பலவகையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதயத்திற்கும், மூளைக்கும் இரத்தம் மற்றும் தேவையான சத்துக்களை கொண்டு செல்லும் இரத்த நாளங்கள் இதயத்தை போலவே சுருங்கி விரியும் தன்மை கொண்டது. அதனால் தான் அவற்றில் இரத்தம் ஓட்டம் நடைபெறுகிறது. 
இரத்தம் குழாய்களில் உற்பத்தி குறையும்போது இரத்த குழாய் சுருங்கி விரிவது குறையும். அப்பொழுது இரத்த குழாய்களில் கொழுப்பு படிய  தொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும், இதனால் மாரடைப்பு பக்கவாதம் ஏற்படக் காரணமாகிறது. 
 
இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் உண்ணும் உணவின் மூலம் இந்த இரத்த குழாய் அடைப்பு பிரச்சனையை சரி செய்து விட முடியும்.
 
இந்த இரத்த குழாய் அடைப்பு நீங்க செய்யும் மருத்துவ பற்றி பார்ப்போம். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில், இரண்டு பற்கள் பூண்டு மற்றும் சிறிதளவு இஞ்சி, சிறிதளவு இலவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து,  இறக்கும் போது அரை எலுமிச்சை பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி இந்த பானத்துடன் சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில் பானத்தை  வடிகட்டி அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, காலை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம்வரை குடித்து வந்தால், இரத்த குழாயில் சேரும் கொழுப்புகள் மற்றும் அடைப்புகள் நீங்கும்.
 
தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வர இரத்த குழாய் அடைப்பு நீங்கும். மேலும் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரில் சீரகம் பொடியை சேர்த்து  12 மணி நேரம் ஊறவைத்து குடித்தால் இரத்த அழுத்தம் நீங்கும்.
 
ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை பழம் சாற்றை பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும். அகத்திக்கீரையை வாரம் இரண்டு முறை  சமைத்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம், இரத்த குழாய் அடைப்பு போன்றவை குணமாகும்.
 
இரத்த குழாய் அடைப்பு நீங்க கருவேப்பிலையை நன்கு அரைத்துப் சாறு எடுத்து கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தினமும்  காலையில் வெறும் வயிற்றில் பருகி வர இரத்த குழாய் அடைப்பு நீங்க ஆரம்பிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்