சிறுநீரகம், சிறுநீர் குழல்கள், சிறுநீர்ப்பை மற்றும் உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் குழல்களையும் உள்ளடக்கியது, நம் சிறுநீரக மண்டலம். சிறுநீரகம் உடலில் இருந்து உப்பு, சுண்ணாம்பு மற்றும் பல வேதிப்பொருள்களை வெளியே அனுப்பும்போது சிறுநீரகத்தில் படியும் தேவையற்ற உப்புகள் கற்களாகவோ, சிறு துகள்களாகவோ உருவாகிப் படிய ஆரம்பிக்கும்.
முதல்நிலைக் கற்கள்: கால்சியம் ஆக்சாலேட் கற்கள், யூரிக் ஆசிட் கற்கள், பாஸ்பேட் கற்கள், மாட்ரிக்ஸ் கற்கள் (புரதக் கற்கள்).
மருத்துவ முறை: மாவிலங்கப்பட்டை - 20 கிராம், நெல்லிக்காய் - 20 கிராம், கடுக்காய் - 20 கிராம், தான்றிக்காய் - 20 கிராம், நெருஞ்சில் - 20 கிராம், சீரகம் - 20 கிராம், சோம்பு - 20 கிராம், தனியா விதை - 20 கிராம், சதகுப்பை - 20 கிராம், சிறுபீளை வேர் - 20 கிராம்
அனைத்தையும் சுத்தம் செய்துகொள்ளவும். அதை இரண்டு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து, ஒரு லிட்டர் தண்ணீராகக் சுண்டச் செய்த பிறகு, அந்த தண்ணீரை அதிகாலை, மாலை இருவேளையும் தொடர்ந்து குடித்து வர, சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையும்.