தலைமுடி உதிர்தலை நிறுத்தி தலைமுடி கருமையாக நன்கு வளர குறிப்புகள் !!

தலைமுடிக்கு தைலம்: கோபுரந்தாங்கி இலைகளை ஐம்பது என்ற எண்ணிக்கையில் சேகரித்துக் கொண்டு, அந்த இலைகளைப் பிழிந்து சாறெடுத்து தனியே வைத்துக்  கொண்டு, வாணலியில் கால் லிட்டர் நல்லெண்ணெய்யை விட்டு, சற்று சூடு வந்ததும், கோபுரந்தாங்கி இலைச்சாற்றை எண்ணெய்யில் கலந்து,  இலையின் பச்சை வண்ணம் எண்ணையில் நன்கு ஏறும்வரை கொதிக்க வைத்து, பின்னர் இந்த எண்ணை ஆறியதும், ஒரு குடுவையில்  சேகரித்து வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
 
குளிக்கும் முன் கோபுரந்தாங்கி தைலத்தை தலையில் தடவி, அரை மணிநேரம் தலையில் ஊறிய பின், தலையை நன்கு அலசி குளித்து வர,  தலைச் சூடு குறைந்துவிடும். உடல் குளிர்ச்சி அடைந்து, கண் பார்வை மேம்படும், தலைமுடி உதிர்தல் குணமாகி, தலைமுடி கருமையாக  நன்கு வளரும்
 
புழு வெட்டுவை தடுக்க:
 
சிலருக்கு, தலைமுடி சில இடங்களில், கொத்துகொத்தாக நீங்கி இருக்கும், விஷப்பூச்சிகளின் கடியினாலோ அல்லது அவற்றின் எச்சத்தாலோ உண்டாகும் இந்த பாதிப்புகள், சமயங்களில் மன உளைச்சலையும் ஏற்படுத்தக் கூடியது. இந்த பாதிப்புகள் நீங்க, கோபுரந்தாங்கி தைலம் ஒரு  வரப்பிரசாதமாகும். 
மேற்சொன்ன முறையில் இந்த தைலத்தை தலையில் தேய்த்து குளித்து வர, தலைப் புண், புழு வெட்டு, படை போன்றவை குணமாகி, முடி கொத்தாக உதிர்ந்த இடங்களில் திரும்பவும், முடி கருகருவென வளர ஆரம்பிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்