சரும அழகை மேம்படுத்த உதவும் அற்புத இயற்கை பொருள் எது தெரியுமா...!!

புதன், 27 ஏப்ரல் 2022 (12:46 IST)
அழகை மேம்படுத்தக்கூடிய ரகசியங்கள் அடங்கி இருக்கிறது. இளைமைய மீட்க பால் அதிகம் உதவுகின்றன. பாலைப் பயன்படுத்துவதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன.


பசும் பாலில் உள்ள ஏ2 புரோட்டின் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடலில் லாக்டோஸ் அளவு குறைவாக உள்ளவர்கள் பசும்பாலை தினமும் பருகுவது அளப்பரியப் பயன்களை அளிக்கும்.

வறண்ட சருமமாக இருப்பதால், வறட்சி காரணமாக அவ்வப்போது அரிப்பு எடுக்கும். இந்த பிரச்சை தீர, தினமும் உடலில் பாலைத் தேய்ப்பதால், அதில் உள்ள லாக்டிக் அமிலம், அதிக ஈரப்பத்த்தை அளித்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

பாலில் உள்ள கொழுப்புத்தன்மை, சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது. பாலில் உள்ள அதிக புரோட்டீன் அழகான, மிருதுவான சருமத்தை அளிக்கிறது.

முகத்தில் ஏற்படும் கருவளையத்தை நீக்கி, தோலின் மேற்பகுதியை மென்மையானதாக வைத்துக்கொள்ள பால் போதும்.

சருமத்தில் இறந்த செல்கள் அப்படியேத் தங்கிவிடுவதால், சருமம் பொலிவிழந்துவிடுகிறது. அவ்வாறு தங்கிவிடும் இறந்த செல்களை, சருமத்திற்கு எவ்விதத் தீங்கும் இல்லாத வகையில் நீக்க பால் உதவுகிறது.

தினமும் பாலை இயற்கை ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம். குறிப்பாக எண்ணை பசை உள்ள சருமமாக இருப்பின் வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம். மற்றவர்கள் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்