உணவில் உள்ள விஷத்தையும் முறிக்கும் தன்மை கொண்ட மிளகு !!

Webdunia
மிளகில் கருமிளகு மற்றும் வால் மிளகு என முக்கியமான இரு வகைகள் உண்டு. மிளகின் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவிற்கு சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. 

மிளகில், அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு. மிளகிற்க்கு குறுமிளகு மற்றும் கோளகம் என்ற பெயர்களும் உண்டு.
 
மிளகின் காரத்தன்மை அதிலுள்ள பெப்பரைன் என்ற வேதிப்பொருளால் உருவாகிறது. பொடியாக்கப்பட்ட மிளகை உலகின் அனைத்து நாடுகளின், சமையலறைகளிலும காணலாம்.
 
செரிமான உறுப்புகளின் செயல்திறனை கூடும். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டுகிறது. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
 
‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்’ என்பது பழமொழி. உணவில் உள்ள விஷத்தை முறிக்கும் தன்மை மிளகிற்கு உண்டு.
 
மிளகு உடலின் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு துணைபுரிகிறது. மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற  பிரச்சனைகளுக்கும், மிளகு நல்ல தீர்வாக அமைகிறது. 
 
மிளகில் இருக்கும் பெப்பரைன் மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. மேலும் மூளை நல்ல செயல்திறனை பெற்று வயதாகாமல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகின்றது. இதன் விளைவாக அல்சைமர், பார்கின்சன் நோய் மற்றும் முதுமை அடைதல்  போன்றவை தடுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்