அன்றாடம் கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் வலுப்பெறுமா...?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல்  காக்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் நெடுநாட்களாக இருக்கும் சளி தொல்லை முற்றிலும்  நீங்கும்.
 
கருப்பட்டியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் இருப்பதோடு சருமம் பளபளப்பு அதிகரித்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
 
ஒரு சில புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பது குறைகிறது. இப்படியான பெண்கள் சுக்கு, மிளகு பொடியை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு  வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். இந்த கருப்பட்டியில் இருக்கும் சத்துகள் தாய்ப்பால் மூலமாக குழந்தைகளுக்கும் சென்று சேரும்.
 
உடலில் இருக்கும் வாதம் தன்மை அதிகரிப்பதாலும், வாயுத் தன்மை அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும் உடலில் வாயு அதிகரித்து, தசைப்பிடிப்பு மற்றும்  இன்ன பிற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கருப்பட்டியுடன் ஓமத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை விரைவில் நீங்கும்.
 
சிறிதளவு கருப்பட்டியில், சிறிது சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கி இருந்த நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் தூய்மை அடையும்.
 
சீரகத்தை நன்கு வறுத்து, சுக்கு கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை நீங்கி, நன்கு பசி எடுக்கும். உணவை எளிதில் செரிமானம் செய்யவும்  உதவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்