சாப்பிடக் கூடாத உணவுகள்: காய்கறிகளில் பீட்ரூட், திராட்சை, சர்க்கரை, ஜாம், பிஸ்கட், சாக்லெட், கார்பனேட்டட் குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், கேக், முந்திரி, க்ரீம் வகை உணவுகள், கொழுப்பு நிறைந்த மசாலா உணவுகள், ப்ரிஸ்ர்வெட்டிவ் கலந்த உணவுகள் ஆகியவைகள் கெடுதல் தரும்.
உடற்பயிற்சி இல்லாதது, நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லாதது, நிறைய மசாலா உணவுகள் மற்றும் குளிர்பானங்கள், உடல்பருமன் ஆகியவைகள்தான் சர்க்கரை வியாதி உருவாகக் காரணங்கள். அதோடு குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தும் இன்சுலின் ஹார்மோன் உற்பத்தியில் திடீர் மாற்றம் எற்பட்டு, அது சுரக்காமல் போகும்போது, குளுகோசின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கிறது. விளைவு சர்க்கரை வியாதி.
சர்க்கரை இல்லாத க்ரீன் டீ, மூலிகை தே நீர், சீமை சாமந்தி தே நீர், ஆகியவை நல்லது. சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்திருக்கும். சர்க்கரைக்கு பதிலாக தேன், பேரிச்சம் பழம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். கொழுப்பு நீக்கப்பட்ட பால், சீஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
கோதுமை, ராகி சர்க்கரை வியாதிகாரர்களுக்கு மிகவும் சிறந்த உணவாகும். பழங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயராமல் எப்போதும் கட்டுக்குள் இருக்கும்.
வெள்ளரிக்காய், லெட்யூஸ், முள்ளங்கி, தக்காளி, கேரட், பூண்டு, வெங்காயம் பீன்ஸ், முட்டை கோஸ், தினமும் தவறாமல் கீரை வகைகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். நிறைய கலர்கலரான காய்களை சாப்பிடும்போது, உங்கள் கணையம் நன்றாக செயல்புரியும். இன்சுலின் சுரப்பை தூண்டும்.
நார்சத்து கொண்ட உணவுவகைகள் சிறந்த முறையில் குளுகோஸை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். அதிக நார்சத்து உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எப்போதும் குளுகோஸின் அளவு கட்டுக்குள் இருக்கும் என ஆய்வுகள் நிருபிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இவற்றில் அதிக அளவு குரோமியம் உள்ளது. இவை ரத்தத்தில் குளுகோஸின் அளவை குறைக்கச் செய்யும்.
பொட்டாசியம் நிறைந்த உணவுகள்: பொட்டாசியம் அதிகம் நிறைந்த நட்ஸ், வாழைப்பழம், கிவி, ஆப்பிள் சைடர் வினிகர், பட்டாணி அகியவற்றை சாப்பிடுங்கள். அதுபோல், பார்லி அரிசி, ஓட்ஸ், பாதாம், எல்லா வித பீன்ஸ் வகைகள் ஆகியவை சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது செய்யும்.