கம்பளிப்பூச்சியின் தொல்லையில் இருந்து விடுபட எளிய டிப்ஸ்...

Webdunia
பொதுவாக மழைக்காலத்தில் தோட்டத்தில் நிறைய பூச்சிகள் வந்து தொல்லைத் தர ஆரம்பிக்கும். அப்படி தொல்லைத் தரும் பூச்சிகளிலயே மிகவும் ஆபத்தானது கம்பளிப்பூச்சி தான். கம்பளிப்பூச்சி உடலில் ஏறினால், சருமத்தில் கடுமையான அரிப்புகளுடன் கூடிய தடிப்புகள் ஏற்படும். ஏனெனில் இந்த பூச்சியின் மேல் உள்ள மயிர்கள் அழற்சித்தன்மைக் கொண்டவை.

 
இவை அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஆகவே இவற்றை எளிதில் அழிக்க சில வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை மேற்கொண்டு, கம்பளிப்பூச்சியின் தொல்லையில் இருந்து விடுபடுங்கள்.
 
* கம்பளிப்பூச்சியை எளிதில் அழிக்க வேண்டுமெனில், அதன் மேல் சோப்புத் தண்ணீரை தெளிக்க வேண்டும். இதனால்  கம்பளிப்பூச்சிகள் எளிதில் அழிந்து, அவை இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கலாம்.
 
* கள்ளிச்செடியில் இருந்து வெளிவரும் பாலை, கம்பளிப்பூச்சிகளின் மீது தெளித்தால், கள்ளிச்செடியின் பாலில் இருந்து  வெளிவரும் வாசனையால் அழிந்துவிடும்
 
* பூண்டுகளை கொதிக்கும் தண்ணீரில் தட்டிப் போட்டு, அந்த நீரை கம்பளிப்பூச்சிகளின் மீது தெளித்தால், அவை இறந்துவிடும்.
 
* தோட்டத்தில் வெங்காயச் செடிகளை வளர்த்து வந்தால், அந்த வெங்காயத்தில் இருந்து வெளிவரும் வாசனையால்,  கம்பளிப்பூச்சிகள் வராமல் இருக்கும்.
 
* மிளகை பொடி செய்து, அதனை தண்ணீரில் கலந்து, கம்பளிப்பூச்சியின் மேல் தெளித்தால், கம்பளிப்பூச்சிகள் அதிகரிப்பதை  தடுக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்