நீர்க்கடுப்புக்கு அற்புத தீர்வு தரும் வெங்காயம் !!

Webdunia
கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோய்களில் முக்கியமானது நீர்க்கடுப்பு. உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்காததாலும், வியர்வை மூலம் உடலில் இருந்து நீர் வெளியேறுகிறது. 

முக்கியமாக கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும்.
 
இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி, சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல், வலி, கடுப்பு ஏற்படும். குறைந்தது ஒரு நாளைக்கு 4 லிட்டர்  தண்ணீராவது குடிக்க வேண்டும். அதே போன்று நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதாவது  நெடுந்தூரம் பயணம் செல்லும் பொழுது இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
 
உடலின் கழிவுகள் சிறுநீர் மூலம் சரியாக வெளியேறாமல், தாது உப்புக்கள் தேங்கி சிறுநீர் அடர்த்தி ஆகிறது. ஆகவே சிறுநீர் மஞ்சளாக, நாற்றத்துடன் வெளியாகிறது. சிறுநீர்க்கழிக்கும் போது எரிச்சலும், நாளடைவில் சிறுநீரக தொற்று, அழற்சி அதன் விளைவாக இடுப்பு வலி மற்றும் வயிற்றில் வலி என  அவதியுறுகின்றனர்.
 
நீர்க்கடுப்புக்கு எளிய தீர்வு தாராளமாக, குறிப்பாக நான்கு லிட்டர் தண்ணீர் தினசரி அருந்த வேண்டும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர்  தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனடியாக நின்றுவிடும்.
 
பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம். சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் வேனல் கட்டிகள்  தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.
 
3 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே  நின்றுவிடும். இல்லை என்றால் மூன்று சின்ன வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிட்டாலும் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்