பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.
நல்லெண்ணெய்யை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.
நல்லெண்ணெய்யை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்யுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊறவைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.