எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள மொச்சை !!

புதன், 15 டிசம்பர் 2021 (13:22 IST)
எண்ணிலடங்க உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை மொச்சை கொட்டை பயிர் தன்னகத்தே கொண்டுள்ளது.


மொச்சை கொட்டையில் வெள்ளை மொச்சை, கருப்பு மொச்சை, சிவப்பு மொச்சை, மர மொச்சை, நாட்டு மொச்சை என பல வகைகள் இருக்கின்றன. 
 
மொச்சை கொட்டை நமது உடலுக்கு தேவையான புரதம், நார் சத்துகள், மினரல்ஸ் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது. மொச்சையின் விதைகள் பச்சையாகவும், காய வைக்கப்பட்ட பிறகும் சமைத்து சாப்பிடபடுகிறது. 
 
மொச்சைக்காயைச் சாம்பாரில் அல்லது குழம்பில் போட்டு அதனைச் சாதத்திற்குப் பயன்படுத்துவார்கள். நடைமுறையில் மொச்சைக் கொட்டை என்று கூறுவார்கள். மொச்சைக் காயை வேக வைத்து சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதில் வைட்டமின் ஈ இருக்கிறது.
 
மொச்சையில் உள்ள கரையாத நார்ச்சத்து, சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இதனால் மலச்சிக்கலுக்கான வாய்ப்பு குறைக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மொச்சைக் கொட்டையை உணவில் சேர்த்து கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 
மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறையும்.
 
வைட்டமின் ஈ குறைபாடு உடையவர்கள் இந்தக் காயை அடிக்கடி சாப்பிடவும். மொச்சைக் காயைப் பச்சையாக உள்ள போது சமைத்துச் சாப்பிட்டால் அதன் பலனை முழுமையாகப் பெறலாம்.
 
ஊரல் வியாதி உள்ளவர்கள், தோல் சம்பந்தமான வேறு வியாதி உள்ளவர்கள் மொச்சைக்காயை உணவில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அப்படிப் பயன்படுத்தினால் தோல் சம்பந்தமான வியாதி மேலும் தீவிரமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்