மாதுளம்பழத்தைப் போலவேபோலவே, இதன் தோலும் அதிகப் பலன் கொண்டது. பெரும்பாலும் இதைச் சருமப் பராமரிப்புக்குப் பயன்படுத்தலாம். மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்தாலோ, உடலில் பூசிக்கொண்டாலோ, வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும். இந்தப் பொடியை நீருடன் கலந்து கொப்பளிக்க, வாய்துர்நாற்றம் நீங்கும். மாதுளம்பழத் தோலின் பொடியுடன், பால், ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் ஃபேஸ்பேக் போடலாம். ரூம் ஃப்ரெஷ்னராகப் பயன் படுத்தலாம்.
உலர் சருமத்தைக் கொண்டுள்ளப் பெண்களுக்கு மாதுளைப் பழம் ஒரு வரமாக் அமைகிறது. மாதுளைப் பழத்தின் விதைகள் ஒரு சிறு மூலக்கூறு அமைப்பினைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மூலக்கூறு அமைப்பானது தோலில் ஊடுருவி எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைய வழிவகை செய்கிறது. எனவே இப்பழம் உலர்ந்த மற்றும் சீரற்ற தோலுக்கு அழகு சேர்க்கிறது. மேலும் சருமத்திலிருந்து ஈரப்பதம் வெளியேறுவதைத் தடுத்து ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.
மாதுளை பழமானது பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஃபோலேட், இரும்புச் சத்து மற்றும் நார்ச்சத்துப் போன்றவற்றிற்கு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. எனவே இப்பழம் கருவுற்றப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், உயிரணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மாதுளைப்பழம் பயன்படுகிறது. கர்ப்பகாலத்தின்போது பருகப்படும் மாதுளைச் சாறு தசைப்பிடிப்புகள் மற்றும் தூக்கத்தில் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கப் பயன்படுகிறது.
மாதுளம்பழத் தோலைப் பொடித்து, தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்ப