நூறு கிராம் கீரையில் 300 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும், 110 மில்லிகிராம் மணிச்சத்தும், 0.3 மில்லிகிராம் இரும்புச் சத்தும் இருக்கின்றன. இக்கீரையில் உயிர்ச்சத்துகள் மிகுதியாக உள்ளன.
நூறு கிராம் கேரட் கீரையில் தயாமின் 0.04 மில்லிகிராம் இருக்கிறது. ரைபோஃளேவின் 0.20 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 0.6 மில்லி கிராமும், வைட்டமின் சி 79 மில்லி கிராமும் அடங்கியிருக்கின்றன.
இக்கீரையைப் பச்சையாக வாயிலிட்டு மென்று பல்துலக்க பல் ஈறுகள் வலுப்பெறும். இவ்வாறே முதிர்ந்த கீரையின் பூத்த நிலையிலுள்ள தண்டுகளைப் பல் விளக்கும் பல் குச்சியாகப் பயன்படுத்தலாம். இவைகள் பல்லுக்கு வலுவூட்டி பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு, ஈறு வீக்கம் முதலிய நோய்களைக் குணப்படுத்தும்.