இத்தனை அற்புத மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளதா கொத்தமல்லி...?

Webdunia
கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற பல சத்துக்கள் உள்ளது. மேலும் ஆரோக்கியத்திற்கு அவசியமான சிலஅமிலங்களும் உள்ளது. குளிர்காலத்தில் இதனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
கொத்தமல்லியில் வைட்டமின் சி அதிகமுள்ளது. உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் சி-யில் 30 சதவீதத்தை கொத்தமல்லியே வழங்கக்கூடும். இது உங்கள் சருமத்தில் கொப்புளங்கள் வராமல் இருக்கவும், வந்த கொப்புளங்களை குணப்படுத்தவும் உதவும். மேலும்  நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
குளிர்காலத்தில் நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளின் அளவை அதிகரிக்கக்கூடும். ஆனால் உங்கள் உடலில் உள்ள LDL என்னும் கெட்ட கொழுப்புகளை குறைக்க கொத்தமல்லி பெரிதும் உதவும்.
 
கொத்தமல்லி குளிர் காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவாக இருக்க காரணம் அதிலுள்ள ஆன்டி அலர்ஜி பண்பாகும். இதிலுள்ள ஆன்டிபாக்டீரியல்  பண்புகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் மூலம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே குளிர்காலத்தில் ஏற்படும் சரும அலர்ஜிகளை  தடுக்க தினமும் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
 
கொத்தமல்லியில் வைட்டமின் சி மற்றும் இரும்புசத்து அதிகம் உள்ளது. இது குளிர்காலத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குளிர் காலத்தில் உங்களுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
 
ஆர்திரிடிஸ் மற்றும் ஆஸ்டோபோரோசிஸ் போன்ற எலும்புகள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் கொத்தமல்லியை அதிகம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். குளிர்காலத்தில் ஏற்படும் சளி உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே எலும்புகளை பாதுகாக்க  கொத்தமல்லி சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் எலும்புகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்