மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மருத்துவ குறிப்புகள் !!

Webdunia
மாதவிடாய் பிரச்சனைக்கும் மருந்து என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. கற்றாழைச் சாற்றில், ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து குடிப்பதன் மூலம் வலியில்லாத இரத்தப் போக்கை உருவாக்க முடியும்.

மாதவிடாயின் போது காஃபிக் அமிலம் நிரம்பிய ஓமத்தை அதிகளவு சாப்பிடுவதன் மூலம், வலியிலிருந்து பெருமளவு நிவாரணம் பெற முடியும். ஓமத்தை மாசாலாக்கள் மற்றும் மூலிகை தேநீரில் கலந்து குடிப்பதன் மூலம், ஆச்சரியப்படுத்தும் விதமான நிவாரணத்தைப் பெற்றிட முடியும்.
 
வயிறு மற்றும் அடி வயிற்றுப் பகுதியில் அதிகளவு வெந்நீர் படும் வகையில் வெந்நீர் குளியல் போடவும். இதன் மூலம் அந்த பகுதியின் இரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியும். 
 
மாதவிடாய் நாட்களில் வலியைக் குறைக்கும் மருந்தாக இஞ்சியைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல், தவறி வரும் மாதவிடாய் சுழற்சியை  வரைமுறைப்படுத்தவும் இஞ்சி உதவும். இஞ்சியை தேநீராக காய்ச்சி குடிப்பதன் மூலம் ஆச்சரியம் தரும் பலன்களை அடைய முடியும். 
 
சிட்ரஸ் பழங்களை அதிகளவில் சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் நாட்களை வலியில்லாத நாட்களாக்கிட முடியும். ஏனவே, சிட்ரஸ் பழங்களை ஜுஸாக்கி குடித்து வலியைக் குறைத்திடுங்கள்.
 
மாதவிடாய் நாட்களில் இரத்தம் குறைவாக இருந்தால், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் கருப்பையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆபத்பாந்தவனாக  பெருஞ்சீரகம் உள்ளது. ஒரு கிளாஸ் தண்ணீரில் பெருஞ்சீரகத்தை கொதிக்க வைத்து, நன்றாக கலக்கி, குடிப்பதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்