கடலை எண்ணெய்யில் போலிக் அமிலம் நிறைந்துள்ளதால், தினமும் தவறாது கடலை எண்ணெய் பயன்படுத்தி வந்தால், மகப்பேறு எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடலை எண்ணெய்யில் அடங்கியுள்ள ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதனால் மார்பகக் கட்டி, புற்று நோய் ஏற்படுவது தவிர்க்கபடுகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பைக் கட்டி, நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
கடலையில் அதிகளவு புரோட்டின் நிறைந்து உள்ளது. அதேபோல இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-டி போன்றவையும் நிறைந்துள்ளது. அதாவது, அசைவ உணவு சாப்பிடாதவர்கள் அதற்கு மாற்றாக நிலக்கடலை சாப்பிடலாம்.