உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரும் மரச்செக்கு எண்ணெய் !!

Webdunia
எண்ணெய் இயந்திரத்தின் மூலம் தயாரிப்பதால் அவை சூடாகி அவற்றில் உள்ள உயிர் சத்துக்கள் அனைத்துமே நீக்கப்பட்டு, வடிகட்டி பார்ப்பதற்கு பளிச்சென்று நமக்கு பாக்கெட்டில் கிடைக்கிறது.

மரச்செக்கு எண்ணெய் தயாரிக்க, செக்கானது வாகை மரத்தினால் செய்யப்பட்ட ஒன்றாகும். அதனை நம் முன்னோர்கள் மாடு பூட்டி இழுத்து அதனை இயற்கை முறையில் தயாரிப்பதனாலே அவை நம் உடலுக்கு நன்மையை கொடுக்கிறது. மேலும் மனஅழுத்தம்,  சர்க்கரை நோய் , இதய நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.
 
மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்குகிறது.
 
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது. அதுபோக உடல் சம்பந்தப்பட்ட அனைத்துக்குமே ஒரு தீர்வாக அமைகிறது.
 
சுத்தமாக தயாரிக்கப்பட்ட செக்கு தேங்காய் எண்ணெய் உடல் பராமரிப்புகளுக்கும் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வை தருகிறது.
 
கடலையில் இருந்து எடுக்கப்படும் கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுவதால் ஆரோக்கியமான உணவை நாம் பெறமுடிகிறது. செக்கு எண்ணெய் பெரும்பாலும் உணவுக்கும்  மட்டுமில்லாமல் மருத்துவம் சம்பந்தமாகவும் பயன்படுகிறது.
 
ஒரிஜினல் செக்கு எண்ணெய் பார்ப்பதற்கும் மனத்திலும் மற்ற எண்ணெய்களை காட்டிலும் வித்தியாசமாக காணப்படுகிறது. ஏனெனில் செக்கு எண்ணெய் தயாரிப்பில் சூடாகாமல் அவற்றில் உள்ள உயிர்சத்துக்களை அப்படியே நமக்கு தருகின்றன. மேலும் அவை செக்கில் ஆட்டிய பிறகு, அதனை பித்தளை பாத்திரத்தில் எடுத்து அதனை வெயிலில் வைத்துவிடுவார்கள். இதனால் சூரிய ஒளியில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. 
 
எண்ணெய் அடர்த்தியாக காணப்படுவதால், 5 லிட்டர் தேவைப்படும் இடத்தில் 2 லிட்டரே தேவைப்படுகிறது அந்த அளவுக்கு அடர்த்தியாக காணப்படுகிறது. மேலும் சமைக்கும் போதும் அதை நாம் உபயோகப்படுத்தும்போது நல்ல மனம் வருவதையும் காணலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்