ஜீரண சக்தியை தூண்டும் தன்மை கொண்ட சீந்தில் பொடி !!

புதன், 22 டிசம்பர் 2021 (15:23 IST)
சீந்தில் கொடிக்கு சோமவல்லி, அமிர்தவல்லி, அமிர்தை, அமிர்தக் கொடி, குண்டலி போன்ற பெயர்களும் உண்டு. அனைத்து விதமான மிதமான மற்றும் உஷ்ண பிரதேசங்களிலும் காணப்படும். 

சித்த மருத்துவத்தில் சீந்தில் கொடியை கற்ப மருத்துவ குணம்  கொண்டதாக கூறப்பட்டுள்ளது. சீந்தில் மூலிகை, உடலின் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் உள்ளது. இதனால் நாள்பட்ட காய்ச்சலில் இருந்து விடுபட உதவுகிறது.
 
மூட்டு வலி மற்றும் வாத நோய் உள்ளவர்கள் சீந்தில் கொடி, தழுதாழை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து சிறுநீரக செயல் இழப்பு, கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு பலனளிக்கிறது.
 
அடிக்கடி ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சீந்தில் மூலிகை தீர்வு அளிக்கிறது. வயிற்று கோளாறு பிரச்சனைகளை தீர்க்க ஆயுர்வேதத்தில் சீந்தில் கொடி பயன்படுத்தப்படுகிறது.
 
சீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி, இளஞ்சூட்டோடு புண்களின் மேல் போட்டுவர வீக்கம் கரைந்து வலி குறையும். புண்களும் ஆறிவிடும்.
 
சீந்தில் பொடி ஜீரண சக்தியை தூண்டும் தன்மை கொண்டது. மேலும் மலச்சிக்கலை சரி செய்யும். அரை கிராம் சீந்தில் பொடியை நெல்லிக்காயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்