கற்றாழையின் பயன்தரும் சில முக்கிய குறிப்புக்களை பார்ப்போம்...!!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (22:02 IST)
முகம் கழுவுவதற்கும் கற்றாழைச் சோற்றைப் பயன்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஃபேஸ் மாஸ்க்காகவும் அதனைப் பயன்படுத்தலாம். இதனை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.

கற்றாழையில் பல வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன, இது உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது என்று கருதப்படுகிறது, மேலும் இதிலுள்ள அமிலங்களும் நொதி உடல்நலத்தை மேம்படுத்துகின்றன என்றும் கூறப்படுகிறது.
 
கற்றாழையில் உள்ள புரோட்டியோலிட்டிக் நொதியானது, தலையின் சருமத்தில் உள்ள சேதமடைந்த செல்களை சரிப்படுத்த உதவுகிறது. முடி வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது, தலையில் பொடுகு மற்றும் அரிப்பு ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. சிறந்த கண்டிஷனராகவும் செயல்படுகிறது.
 
இருமல் மற்றும் ஜலதொஷத்தில் இருந்து நிவாரணம் பெறவும் கற்றாழை உதவுகிறது. கற்றாழை ஒரு மலமிளக்கியாகவும் செயல்படும் என்று கூறப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.
 
கற்றாழையில் பூஞ்சை எதிர்ப்புப் பண்பு அதிகமுள்ளது, இதனால் வறண்டுபோன, அழற்சி உள்ள சருமத்தின் மீது இதனைப் பூசினால் நோய்த்தொற்றினால் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் குறையும். எனினும், இதனைப் பயன்படுத்தும் முன்பு உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதே நல்லது.
 
கற்றாழைச் சோற்றை ஓட்மீல் மற்றும் பாடி லோஷனுடன் கலந்து பயன்படுத்தினால் மிகுந்த பலன்களைக் கொடுக்கும். அது இறந்த செல்களை அகற்றவும் பாதத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கவும் உதவுகிறது.
 
கற்றாழையில் பல இயற்கையான தாதுக்கள் உள்ளன, உங்கள் புருவங்களுக்கு அழகிய வடிவம் கொடுக்க அவை மிகவும் உதவும். கற்றாழைச் சோற்றையும் விளக்கெண்ணெய்யையும் சம அளவு கலந்து கொண்டு தினமும் புருவங்களில் பூசுங்கள், சில நாட்களில் வித்தியாசத்தைக் காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்