கோவை இலையின் அற்புத மருத்துவ குணங்கள் என்ன...?

திங்கள், 13 டிசம்பர் 2021 (20:53 IST)
கோவை இலையால் இருமல், வாதகோபம், பெருவிரணம், சிறு சிரங்கு, தேகசூடு, நீரடைப்பு முதலிய நோய்கள் குணமாகும்.

இக்கீரை கண்களுக்குக் குளிர்ச்சி கொடுக்கும். கோவை இலையை நெய்விட்டு அரைத்துச் சாதாரணமாகக் காணும் புண்களுக்கும், அம்மையினால் உண்டான ரணங்களுக்கும் மேலே பூச புண் குணமாகும்.
 
கோவை இலையைக் கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் சென்றபின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் கொடுக்க உடல்சூடு, சொரிசிரங்கு, நீரடைப்பு, இருமல் ஆகியவை நீங்கும். இலையைப் பொடித்து திரிகடி பிரமாணமாகக் கொடுத்தாலும் மேற்குறிப்பிட்ட நோய்கள் நீங்கும். 
 
கோவை இலையை எண்ணெய்யில் கொதிக்க வைத்துப் படை, சொரி, சிரங்கு இவைகளுக்குப் பூசலாம். இவ்விலை சாறுடன் வெண்ணெய் சேர்த்துச் சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் சாற்றை வியர்வை உண்டு பண்ணுவதற்கு உடலில் பூசுவது உண்டு, கோவை இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய் கூட்டிக் காய்ச்சி வடித்து படர்தாமரை புண்ணுக்குப் பூசலாம்.
 
ஆசன துவாரத்தில் காணும் எரிச்சல், இரணம் இவைகளுக்கு மேல் தடவிவர புண் ஆறி குணமாகும். உடல் மீது பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு வண்ணமும், நிறமும் ஊட்டுவதற்கு இக்கீரை பயன்படுத்தப் படுகிறது.
 
இலையை எண்ணெய்யில் கொதிக்க வைத்துப் படை, சொரி, சிரங்கு இவைகளுக்குப் பூசலாம். இவ்விலை சாறுடன் வெண்ணெய் சேர்த்துச்  விலையோடு நெய் சேர்த்து வாட்டி கட்டிகளுக்கு இடக் கட்டிகள் பழுத்து உடையும். வாய்ப்புண் நீங்குவதற்கு இலையை மென்று சுவைக்கலாம். அவ்வாறு சுவைப்பதினால் வாய்ப்புண் ஆறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்