மருத்துவ குணம் நிறைந்த தேனின் பயன்கள் பற்றி அறிந்து கொள்வோம்

Webdunia
தினமும் உணவில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து தேனை சேர்த்துக் கொண்டால், அது உடலில் ரத்த சர்க்கரையின் அளவை சீராக்கி, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். இதய நோய் தாக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.

 
தேனின் பயன் அறிந்தே, நமது ஆயுர்வேத வைத்தியத்திலும் சித்த வைத்தியத்திலும் பல சூரணங்களைத் தேனில் குழைத்து உண்ணத் மருத்துவர்கள் தருகிறார்கள். தேனை உண்டால் பசியும் ருசியும் உண்டாவதோடு. நல்ல உறக்கமும் ஏற்படுகிறது.
 
வாய்வுத் தொல்லையில் இருந்து நீங்குவதோடு, வயிற்று உப்புசம் குறைந்து, ஒருவித புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தி மற்றும் வலிமையை அதிகரிக்கச்  செய்யும்.
 
உடல் பருத்தவருக்கும், உடல் இளைத்தவருக்கும் தேனே சிறந்த மருந்தாக உள்ளது. உடல் பருமனானவர்கள் தினமும்  வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி விட்டு அருந்திவர, உடலிலுள்ள ஊளைச்சதை குறையும் பலம் அதிகரிக்கும்.
 
உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள டாக்ஸின்கள் அனைத்தும் சிறுநீர் பெருக்கத்தின் மூலம் முழுமையாக வெளியேற்றப்படும். உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றி, சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதல்களில் இருந்து  பாதுகாத்து, பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது.
 
உடல் மெலிந்தவர்கள் இரவு உணவிற்குப் பின், ஒரு கப் பசும்பாலில் இரண்டு தேக்கரண்டி தேனை விட்டு அருந்திவர,  உடல்  பருமன் கிட்டும், ஆயுளும் நீடிக்கும்.
 
தேன் பருகுவதன் மூலம் பல தொற்று நோய்கள், மலேரியா, அம்மை போன்ற நோய்களை வரமால் தடுக்கலாம். பேரீச்சம்பழத்தைக் தேனில் ஊற வைத்து உண்பதால் நல்ல இரும்புச்சத்தோடு. தேனிலுள்ள சத்துக்களும் கிடைக்கும் அதுபோல்,  ரோஜா மலரிலுள்ள இதழ்களை தேனில் ஊறவைத்து உண்பதால், உடலுக்குபலமும், குளிர்ச்சியும், தாதுவிருத்தியும் உண்டாகும். 
 
ஒரு கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும் தேன் தண்ணீரில்  கரையாமல் அப்படியே அடியில் சென்றால் அது சுத்தமான தேன் என்பதனை கண்டறியலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்