ஜெயலலிதாவை மருத்துவமனையில் நான் சந்தித்தேன்: அமைச்சர் நிலோபர் கபில் தகவல்!

செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (17:23 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் யாரும் சந்திக்கவில்லை. அவரை சந்தித்ததாக பொய் கூறினோம் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சில தினங்களுக்கு முன்னர் கூறினார்.


 
 
இதனையடுத்து தமிழக அரசியல் சூழலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும் போது அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்ததாக கூறி குழப்பத்தை ஏற்படுத்தினார். அமைச்சர்கள் ஏன் மாற்றி மாற்றி பேசுகிறார்கள் என்ற குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.
 
இந்த சூழலில் அமைச்சர் நிலோபர் கபிலும் செல்லூர் ராஜூ கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக ஜெயலலிதாவை தான் மருத்துவமனையில் சந்தித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் குழுவாக சென்று பார்த்தோம் என்றார்.
 
அவசர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயலலிதா இரண்டாவது வார்டுக்கு மாற்றப்பட்டபோது அவரை தான் சந்தித்ததாக கூறிய அமைச்சர் நிலோபர் கபில் மற்ற அமைச்சர்கள் கூறிய கருத்துக்கள் குறித்து தனக்கு தெரியாது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்