சுலபமான முறையில் நெஞ்சுக்கோழையை நீக்கும் குப்பைமேனி !!

Webdunia
சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி அல்லது  கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும். 

நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்துவிட முடியும்.  நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும்.
 
குப்பைமேனி இலை நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி  மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. 
 
குப்பைமேனி இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை  வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும். 
 
குப்பைமேனி வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது. இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும்  வெளியேறும்.
 
குப்பைமேனி இலையுடன் பூண்டு சேர்த்து அரைத்து பாலில் கலந்து கொடுக்க குழைந்தைகள் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேறும். குப்பைமேனி இலையுடன்  சர்க்கரை சேர்த்து பாலில் 1 ஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி தீரும். உடல் குளிர்ச்சி பெறும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்