இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது பெண்களுக்கு மட்டுமல்ல பொதுவாகவே உடல் ஆற்றல் அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இரும்பு சத்து மிகவும் அடிப்படையான தேவை என்பதை பலரும் புரிந்துகொள்ள வேண்டும்.
உடல் ஆற்றல் குறைந்து எப்போதும் சோர்வாகவும், சோம்பேறியாகவும் இருக்கும். எந்தவேலையையும் செய்யத் தோன்றாமல் சோர்வுடனே இருப்பீர்கள். நீங்கள் செய்ய வேண்டும் என்று முற்பட்டாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது. இப்படியான அறிகுறிகள் இரும்புச் சத்துக் குறைபாட்டிற்கு முக்கிய காரணிகளாகும்.
உங்கள் சருமம் வெளிரிய நிறத்தில் இருக்கிறது அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்றாலும் இரும்புச் சத்துக் குறைபாடேக் காரணம். இப்படி வாயின் உள்பக்கம் இரத்த ஓட்டம் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருத்தல், உதடு, விரல் நகங்கள் நன்கு வெள்ளை நிறத்தில் மாறுகிறதெனில் இரும்புச் சத்துக் குறைபாடே காரணம்.