விளைச்சல் இருக்கு விலை இல்லை என்கின்ற கவலை இனி முருங்கை விவசாயிகளுக்கு வேண்டாம் – கரூர் அருகே ஒரு இயற்கை பெண் விவசாயியின் புதிய கண்டுபிடிப்பு
முருங்கை விவசாயிகளுக்கு மறுவாழ்வு கொடுப்பது போல, அந்த விவசாயிகளின் விளைச்சலுக்கு மறுவாழ்வு கொடுத்த இயற்கை பெண் விவசாயி – கரூர் அருகே கலக்கும் பெண் விவசாயி – மூலிகை எண்ணையாம்! முருங்கை எண்ணையில் பலவித நோய்கள் விலகுது!
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி என்றாலே, தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் நினைவிற்கு வருவது முருங்கை விவசாயம் தான், ஆனால் மூலிகை குணம் கொண்ட இந்த முருங்கை ஆண்மை விருத்தி மட்டுமல்ல, ஒரு இயற்கை சத்துக்கள் வாய்ந்தவையாகும், இந்நிலையில், மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ள இந்த அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மட்டுமில்லாமல் இதன் அருகே உள்ள சில பெரிய ஊர்கள் முதல் சிறிய ஊர்கள் வரை இந்த முருங்கை விவசாயம் தண்ணீர் இல்லாமல் கூட வளாரும் சக்தி கொண்ட இந்த முருங்கை விவசாயம்.
ஆனால், "முருங்கையைப் பதப்படுத்தி வைத்துக்கொள்ள குளிர்பதனக் கிடங்கும், முருங்கையைப் பவுடராக்கி விற்பனை செய்ய பவுடர் தொழிற்சாலையும் அமைத்து தாங்கன்னு இந்த பகுதி விவசாயிகள் மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இருபது வருஷ கோரிக்கையை யாரும் செவிசாய்க்க வில்லை" என்று அந்த விவசாயிகள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.
இதுதவிர முருங்கையை பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழக உற்பத்தியில் 60 சதவிகிதம் உற்பத்தி அரவக்குறிச்சி பகுதிகளில் விளையும் முருங்கை தான் என்றால் அது மிகையாகாது. மர முருங்கை, செடி முருங்கை என்று இரண்டு வகையான காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சில விவசாயிகள் நீளமாக இருக்கும் யாழ்ப்பாண முருங்கையையும் உற்பத்தி செய்கிறார்கள். ஜனவரி, டிசம்பர் மாதங்கள் தவிர்த்து மற்ற மாதங்கள் முழுவதும் முருங்கை காய்த்து பயன் தரும். அதனால்தான், நம்மாழ்வார், 'ஒரு முருங்கை மரமும், பசுமாடும் இருந்தா எந்த மோசமான வறட்சியிலும் ஒரு குடி பொழச்சு இருக்கும்' என்று சொல்லி வைத்திருக்கிறார்.
கரூர் மாவட்டத்தில்., அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், ஈசநத்தம், க.பரமத்தி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் ஒட்டுமொத்தமாக விவசாயிகள் முருங்கைக் காய்களை கட்டு கட்டாக கொண்டு வந்து குவிக்கின்றார்கள். அவை தமிழத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பெங்களூரு என்று பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகிறது.
இந்த "முருங்கை டிமாண்ட் ஆகும் போது கிலோ 200 வரைகூட விற்கும். ஆனால், முருங்கை அதிகமாக உற்பத்தி ஆகி, சந்தை இல்லைன்னா அத்தனையும் வேஸ்டா போயிடும். விலை கிடைக்காது; அப்போ மாடுகளுக்கு உணவா கொடுக்கும் சூழல் வரும். ஒரு சமயம் ஒரு கட்டு முருங்கையே ரூ 1 க்கும், அதை விட குறைவாக போனால் ரோட்டு ஒரத்தில் கொட்டும் அவலமும் ஏற்படும். அரவக்குறிச்சி பகுதி வறட்சியான பகுதி. இதனால், கிணற்றுப் பாசனம் மூலம் இந்த முருங்கை உற்பத்தியையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே செய்து வரும் இப்பகுதி விவசாயிகள். அடுத்து, வருடம் முழுக்க பல ஆயிரம் கிலோ முருங்கையை சேமித்து வைக்கவோ, அதை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்கவோ முடியாமல், மாடுகளுக்கு உணவாக கொடுக்கும் அவலமே ஏற்படுகின்றதே தவிர 'முருங்கையை பதப்படுத்தி வைக்க குளிர்பதனக் கிடங்கு ஒன்றையும், முருங்கையைப் பவுடராக்கி ஏற்றுமதி பண்ண ஏதுவாக பவுடர் தொழிற்சாலை ஒன்றையும் அமைத்து தாங்க'ன்னு இருபது வருஷமா கோரிக்கை வச்சுக்கிட்டு இருக்கோம். ஆனால், யாரும் செய்யலை" என்று விரக்தியடைந்த விவசாயிகளுக்கு ஒரு, வரப்பிரசாதமாக, ஒரு இயற்கை பெண் விவசாயி, முருங்கை விதைகளில் இருந்து முருங்கை எண்ணை எடுத்து அதை மருத்துவத்திற்கு கொடுத்து அசத்தி வருகின்றார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, பள்ளப்பட்டி பகுதியை அடுத்த லிங்கமநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்தவர் சரோஜா குமார்., இவர் ஆரம்ப காலத்தில் நம்மாழ்வாரின் சிஷ்யையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மறைவிற்கு பின்பு இயற்கையையும், இயற்கை விவசாயத்திற்காகவும் பல பல கண்டுபிடிப்புகள் செய்து வரும் நிலையில், முருங்கை விவசாயிகளை காத்திடவும், முருங்கையினை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றவும், முருங்கை விலைபோகாத காலத்தில், அந்த முருங்கையினை அப்படியே விதைகளுக்கு விட்டு விட்டு, அந்த முருங்கை விதைகளை நன்கு காயவைத்த பின்பு நன்கு செறிவூட்டப்பட்டு, அதை அரைத்து முருங்கை எண்ணையாக விற்று வருகின்றார். முதலில் ஆட்டிய முருங்கை எண்ணையை அவரே, உண்டு தன்னை உடல் பரிசோதனை செய்து பின்னரே விற்பனை செய்து வரும் சரோஜா குமாருக்கு, அதே பகுதி விவசாயிகள் பலரும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருவதோடு, ஆங்காங்கே இந்த முருங்கை எண்ணைகள் நல்ல விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆண்மை குறைவு, கண்புரை, கிட்னி பெய்லியர் முதல், ஆங்காங்கே உடல்சம்பந்தமான பலவித நோய்களையும் பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும் நீக்கி வரும் இந்த மூலிகை முருங்கை எண்ணைகளை பலதரப்பினர் வாங்கி செல்கின்றனர். மேலும்., இந்த இயற்கை பெண் விவசாயியின் ஒரு சூப்பர் ஐடியாவினால் இனி முருங்கை விவசாயம் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாகவே இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.